இலங்கை செய்திகள்

அதிகாரிகளை கண்காணிக்க ஜனவரி முதல் நடவடிக்கை! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனைச் செய்யத்  தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது என ஐக்கிய ...

மேலும்..

6 கிலோ ஆமை இறைச்சியுடன் பாஷையூரில் ஒருவர் கைது!

யாழில் சுமார் 6 கிலோகிராம்  ஆமை இறைச்சியுடன் ஒருவர், பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத்  தகவலை அடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் ...

மேலும்..

மட்டுவில் குரங்குகள் அட்டகாசம் சேதமடைகின்றன வீட்டு கூரைகள் பொதுமக்கள் கவலை

மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் குறிப்பாக காத்தான்குடி நகர சபை பிரிவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வீட்டுக் கூரைகளின் மீது ஏறிப் பாய்வதால், தற்போதைய பருவமழை காலத்தில் நனைந்து ...

மேலும்..

ஷானி அபேசேகரவுக்கு  உடன் போதிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்; எனக் கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதுகாப்புத் துறையினருக்கு  உத்தரவிட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தமக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் துறையினருக்கு  உத்தரவு பிறப்பிக்குமாறு ...

மேலும்..

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ...

மேலும்..

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் கடுமையாக பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ' சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கரைச்சி ...

மேலும்..

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்றுகூடிய காணி ...

மேலும்..

வடக்கில் வேகமாகப் பரவி வரும் ‘ வெண் முதுகுத் தத்தியின் தாக்கம்!

வட மாகாண ரீதியில் நெற் பயிரில் வேகமாக பரவி வரும் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்,விசேட கூட்டமொன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி ...

மேலும்..

லண்டனில் பல லட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர்!

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ...

மேலும்..

மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் ஆய்வு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியான கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் ...

மேலும்..

கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் உடன் அழிக்கப்பட்டு விடுகின்றனவாம்! தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமளித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கின்றது என்ற ...

மேலும்..

இலங்கைக் கிரிக்கெட் சபையில் ஆலோசகராக சனத் ஜயசூரிய!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் ...

மேலும்..

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிரடி

'பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்' என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - தினமும் காலை ...

மேலும்..

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் வழங்கல்! சுன்னாகம் லயன்ஸ் கழக அனுசரணையில்

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டெங்கு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் டெங்கு விழிப்புணர்வுக் ...

மேலும்..

மஹிந்தவிடம் இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்த உலகத் தமிழர் பேரவை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தைச் சமர்ப்பித்துள்ளது. உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் பின்னர் இமாலய பிரகடனத்தை குறித்த ...

மேலும்..