இலங்கை செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தற்போதைய ...

மேலும்..

பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது – அனுரகுமார

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் பொருளாதார பாதிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இந்த தெரிவுக்குழு பயனற்றது. அரச நிதியையும், காலத்தையும் வீணடிக்காமல் இந்த தெரிவுக்குழுவை இரத்து செய்யுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ...

மேலும்..

காஸாவில் அமைதியை ஏற்படுத்த எமது நாடு உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேல் இராணுவத்தினரால் காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை நிறுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த எமது நாடு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வரவு ...

மேலும்..

ருவாண்டாவின் உள்ளூராட்சி அமைச்சரை சந்தித்தார் ஊவா மாகாண ஆளுநர்

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. ருவாண்டாவில் நிகழ்த்தப்படும் 10வது பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற மாநாட்டுடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது 2023 ...

மேலும்..

தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : பஸ் நடத்துனருக்கு காயம்

இரத்தினபுரி - தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) அதிகாலை விபத்துக்குள்ளானது . தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ...

மேலும்..

கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொலை – துஷ் விக்கிரமநாயக்க

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இதுவரை முறையான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை ...

மேலும்..

அரசின் வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பாம்! அகிலவிராஜ் கூறுகிறார்

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'தற்போது நாடு இருக்கும் ...

மேலும்..

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்! எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் ...

மேலும்..

மன்னாரை குறிவைக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்! சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்

'மன்னாரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக' வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வு காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை ...

மேலும்..

60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன் மீது சந்தேகத்தின் பேரில் சுங்க ...

மேலும்..

யாழில் நூற்றாண்டு பழைமையான மரம் முறிந்து விழுந்தது!

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று(16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக ...

மேலும்..

பொதுமக்களிற்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கான போதிய பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது – சுமந்திரன்

நீதிமன்றம் நஷ்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் 22 மில்லியன் மக்களிற்கும் நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த பணத்தை மீட்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் ...

மேலும்..

பலமான பொருளாதார ஆண்டாக 2024 ஐ மாற்றுவதே எதிர்பார்ப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து

2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8 வீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், ...

மேலும்..

கைகள், கால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக ...

மேலும்..