இலங்கை செய்திகள்

33 வருடங்களின் பின் புதுப்பொலிவுபெறும் காங்கேசன்துறை ஞானவைரவர் ஆலயம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆலயம் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு ...

மேலும்..

ஹரீன் மற்றும் மனுஷவின் மனுக்கள் ஒத்தி வைப்பு!

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் ...

மேலும்..

கெஹலியவின் பதவியை பறித்தமையால் மகிழ்ச்சி! கம்மன்பில கூறுகிறார்

கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது என ஜனாதிபதி தீர்மானித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

விரும்பியோ அல்லது விரும்பாமலோ தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்! முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

அரசமைப்புக்கு ஏற்ப அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பியோ அல்லது விரும்பாமலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்படல்வேண்டும் சம்பிக்க அறிவுரை

நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வேண்டும், 225 உறுப்பினர்களை விரட்டியடிக்க வேண்டும் என இளைஞர்கள் குறிப்பிடுவதை நியாயப்படுத்தும் வகையில் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன், கடுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

லலித்கொத்தலாவலவின் மரணத்தில் சந்தேகம் அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு! பிரேதபரிசோதனைக்கு உத்தரவு

இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித்கொத்தலாவலயின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர் பிரேதபரிசோதனை இடம்பெறவேண்டும் என நீதிமன்றத்திடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். லலித்கொத்தலாவலயின் மரணம் தொடர்பில் பிரதேச பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை குடும்ப உறுப்பினர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திடம் ...

மேலும்..

அரசாங்கங்கள் மாறும்போது தேசியத் திட்டங்களில் மாற்றம் வருவது நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறு!  பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

தேசிய பௌதீகத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து ...

மேலும்..

நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!  எஸ்.எம். மரிக்கார் சாடல்

நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஹோமாகமை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு வாரமும் ...

மேலும்..

விமான தளபதி தலைமையில் ‘டெக்னோ 2023’ தேசிய பொறியியல் தொழில்நுட்பக் கண்காட்சி!

'டெக்னோ 2023' தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  20ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  அதன் மற்றும் இரண்டாம் நாள் தொடக்க விழாவில் விமானப்படை தளபதி  எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் ...

மேலும்..

தமிழர்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளதாம்! டக்ளஸ் கூறுகிறார்

எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் ...

மேலும்..

வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் மோசமாக பாதிப்படைவு! ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் மஹிந்த

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் இந்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சின் போது விசேட கவனம் செலுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இரத்தினபுரி – ...

மேலும்..

விஜயின் லியோ பார்க்கச் சென்றவர்களுக்கு மட்டக்களப்பில் வாள் வெட்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற குழுக்களுக்கிடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ...

மேலும்..

ஆதிவாசிகள் நயினாதீவில்!

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100 இற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் ...

மேலும்..

மின்சார சபை நட்டத்தில் இயங்குவதற்கு முறையற்ற முகாமைத்துவமே காரணமாம்! கடுமையாகச் சாடுகிறார் வே.இராதாகிருஷ்ணன்

மின்சார கட்டண அதிகரிப்பு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மேலும் பாரிய சுமையாக அமைந்துள்ளதாகவும் முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பெயரில் சேகரித்த நிதி முழுமையாக தெல்லிப்பழைக்கே! லயன்ஸ் கழக ஆளுநர் அவையில் இறுதி முடிவு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு என சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவும் வைத்தியசாலையின் பெயரைப் பயன்படுத்தி உள்ளூரில் சேகரிக்கப்பட்ட 52 லட்சம் ரூபாவும் முழுமையாக வட்டியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே வழங்குவது என இறுதிசெய்யப்பட்டது. சர்வதேச லயன்ஸ் ...

மேலும்..