இலங்கை செய்திகள்

யாழில் உண்டியல் திருடன் கைது

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ...

மேலும்..

தையிட்டியில் மீண்டும் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. குறித்த போராட்டம் இன்று (31) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை மாலை 4.00 மணிவரை இடம்பெறுமென ...

மேலும்..

தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் டக்ளஸ் சந்திப்பு!

யாழ்ப்பாணம்  வலி.வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது,  திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியமான வழிமுறை ...

மேலும்..

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கிறோம்! இலங்கையும் இதனை செய்யவேண்டும் என்கிறார் கனடா தூதர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடாத் தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ...

மேலும்..

மன்னாரில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு

மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வியாழக்கிழமை மாலை (27) மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக ...

மேலும்..

தலவாக்கலையில் மாபெரும் மருத்துவ முகாம்

தலவாக்கலை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாபெரும் மருத்துவ முகாமொன்று இடம்பெறுகின்றது. இந்த மருத்துவ முகாமில் 1000 பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த நோயாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஹேமாஸ் வைத்தியசாலையின் 6 வைத்திய ஆலோசகர்கள், 25 வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ...

மேலும்..

இலங்கைக்கான கடன் நிவாரண நடவடிக்கைகளில் சீனாவும் தன்னை இணைந்துக்கொள்ள வேண்டும்! இந்திய நிதி அமைச்சர் கோரிக்கை

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ...

மேலும்..

மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறைய பேர் குளிர்காய்கின்றார்கள்! ஜீவன் தொண்டமான் பேட்டி

மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறையபேர் குளிர்காய்கிறார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார். நேர்காணலில் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு - மலையகத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் பொறுப்பு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் கல்வித்துறை சார்ந்து ...

மேலும்..

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாம் நாள் நடைபயணம்! பேசாலையில் நிறைவு

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை சென்றடைந்து நிறைவுற்றது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகரை நோக்கி பேரணி நகர்ந்தது. மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் ...

மேலும்..

தண்ணீர் பவுஸர் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு ; பவுஸருக்கு பொதுமக்கள் தீ வைப்பு! – வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் தண்ணீர் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் மாலை நேர வகுப்புக்கு தனது சகோதரனுடன் சென்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். தண்ணீர் ஏற்றி ...

மேலும்..

வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்பு அவசியத்தை வலியுறுத்தினார் ஜப்பான் அமைச்சர்!

அனைத்துக் கடன்வழங்குநர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த உச் செயன்முறையின் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா, கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை அரசு கொண்டு வந்தால் செய்யவேண்டியதை நாம் பார்த்துக் கொள்வோம்! எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை

ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனில் சிறப்புற இடம்பெற்ற கோலப்போட்டி

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ் வகையில் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஊரெழு மேற்கு ...

மேலும்..

யாழில் வைத்தியரின் வீடுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் - கந்தர்மடத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீடு ரவுடிக்கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த வைத்தியரின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

மனித புதைகுழிகள் செம்மணியில் இருந்து கொக்கு தொடுவாய் வரை தொடர்கிறது

மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (28) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த ...

மேலும்..