இலங்கை செய்திகள்

மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகளால் ...

மேலும்..

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் – சபா குகதாஸ்

தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

தமிழர்கள் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

மேலும்..

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவை கைதுசெய்யப் போவதில்லை என நீதிமன்றுக்கு அறிவிப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ...

மேலும்..

இராணுவத்தினர் பயணித்த பஸ் மோட்டார் சைக்கிளை மோதியதில் 3 வயதான சிறுமி பலி : தாய் காயம்!

இராணுவத்தினர் பயணித்த பஸ் ஒன்று மோதியதில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை அறிவேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற ...

மேலும்..

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம் – எம்.உதயகுமார்

அரசியல் நோக்கமற்ற வகையில் இதய சுத்தியுடன் சிறந்த முறையில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம். இந்த சட்டமூலம் திருடன் கையில் சாவி கொடுத்தது போல் அமைந்து விடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது – சாந்த பண்டார

நாட்டில் சிறந்த ஊடக ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வது தவிர ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது. மாறாக ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுகிறது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பாக நிலையியற் கட்டளை ...

மேலும்..

சகல அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இல்லாவிடில் மக்கள் எதிர்மறையாகச் செயற்படுவார்கள்! வெருட்டுகிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ

  ஆசியாவில் சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் இலங்கையில் இயற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆகவே ஊழல் ஒழிப்புக்கு சகல அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்க ...

மேலும்..

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும்வரை இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை! மனித உரிமைகளிற்கான பிரதி ஆணையாளர் சுட்டிக்காட்டு

  இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார ...

மேலும்..

மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசை பாதுகாக்கிறது! எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சாட்டை

  கபுடு கா,கா, என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால் சிறிது காலம் விலகி இருந்தவர்களுக்கு எதிர்வரும் நாள்களில் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதாரப் ...

மேலும்..

எனது மகளை சிறிய பாடசாலையிலாவது சோத்துக்கொள்ளுங்கள் – மகளை தோளில் சுமந்துகொண்டு தாய் போராட்டம்

எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும்.இலங்கையில் ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையின் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையைபெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் ...

மேலும்..

தரம்பெற்ற அதிபர்கள் சங்கத்தின் வடமாகாண சம்மேளன கூட்டம்

தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் வடக்கு மாகாண சம்மேளனக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் பொதுச் ...

மேலும்..

மனுவை மீளப் பெற்றார் ஜெரோம் பெர்னாண்டோ !!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுள்ளார். குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மனுவை ...

மேலும்..