இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் புதன்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் ...

மேலும்..

அத்தியாவசியப் பொருள்களுக்கான அரசின் வரியை மீளாய்வுக்குட்படுத்தி நீக்க நடவடிக்கை எடுக்குக! விந்தன் கனகரட்ணம் வலியுறுத்;து

அத்தியாவசியப் பொருள்களுக்கான வரியை மீளாய்வுக்கு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும் என முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக  அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - புதுவருடம் தொடங்கி  புதுவருட அன்றே ...

மேலும்..

இயற்கை அனர்த்தங்களின்போது பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிக்கையிடுக! வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் அறிவுறுத்து

மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போது சொத்துக்கள், உயிர் சேதங்கள் தொடர்பில் மாத்திரம் அறிக்கையிடப்படுகின்ற ...

மேலும்..

உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை! சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 850 அத்தியாவசிய மருந்துகளில், உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு காணப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஜே.என்.1 பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு ...

மேலும்..

‘மூச்சு’ திரைப்படத்தின் பாத்திரங்கள் அறிமுகம்!

  கொடிகாமம் நட்சத்திரமஹால் அனுசரணையுடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈழத்தில் உருவாக்கப்படும் கலைஞானி குமரநாதனின் 'மூச்சு' திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். மூச்சு திரைப்பட கதாநாயகனாக கலைஞானி குமரநாதன்,கதாநாயகியாக ஷரோனி பெர்னாண்டோ ஆகியோரும், உப கதாநாயகனாக சுபேசன், வில்லன்களாக திருச்செல்வம் மற்றும் ...

மேலும்..

பருத்தித்துறை தீ விபத்து; நேரில் சென்ற நீதிவான்!

யாழ் – பருத்தித்துறை பகுதியில்  உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று(02) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்ற பருத்தித்துறை நீதவான், அங்கு விசாரணைகளில் ஈடுபட்டார். இதே வேளை தடயவியல் பொலிஸாரும்  குறித்த பகுதியில் சோதனை ...

மேலும்..

ரயில், ஓட்டோ கட்டணங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்! அமைச்சர் பந்துல தகவல்

போக்குவரத்துத் துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

குற்றச் செயல்கள் தகவலளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு 0718598800 எனும் புதிய தொலைபேசி ...

மேலும்..

வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் குடியேறியவர்கள் அந்த பிரதேச மக்களே ஆவர்! முன்னாள் எம்.பி சந்திரகுமார் சுட்டிக்காட்டு

நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்டு மலையகம் உட்பட தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்து கிளிநொச்சியில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் கிளிநொச்சி மக்களே. அவர்களை அரசியல் மற்றும் இதர நோக்கங்களுக்காகப் பிரித்துக் கையாளக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆறுதல்

பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாகக் குறைவடையும். எனவே கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ...

மேலும்..

வரி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்! ரங்கே பண்டார தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்டிருக்கும் வற் வரி தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்து வருகிறார். அதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும்! பிரதமர் தினேஷ் குணவர்தன திட்டவட்டம்

நாம் இக்கட்டான சூழ்நிலையிருந்து விடுபட்டுள்ளோம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் சவால் ஒன்றே தற்போது எமக்குள்ளது. நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முன்னெடுத்துச்செல்லும்  வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ...

மேலும்..

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன! விமானப்படை தலைமையக திறப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே தாம் மேற்கொண்டிருப்பதாகவும், நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்களை ...

மேலும்..

தேசபந்து தென்னக்கோனை உடன் பதவியிலிருந்து நீக்குக! சித்திரவதைக்கு எதிரான இலங்கை ஒன்றியம் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்தால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சித்திரவதைக்கு எதிரான இலங்கை ஒன்றியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நபரொருவரைக் ...

மேலும்..

71 எம்.பிக்களுடன் புதிய கூட்டணி பெரமுனவுடன் நாம் இணையோம்! ரணிலுக்கே முழு ஆதரவு என்கிறார் நிமல் லன்சா

ஸ்ரீலங்கா பொதுஜன மற்றும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு ஆனால் தற்போது அந்த கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 71 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றோம். இக்கூட்டணி ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடன் இணையாது. மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ...

மேலும்..