இலங்கை செய்திகள்

அன்று யுத்தத்தால் பறிபோன மனித உயிர்கள் இன்று வீதி விபத்துக்களால் பறிக்கப்படுகின்றன.

த. சுபேசன் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பெறுமதியான பல இலட்சம் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.ஆனால் தற்போது யுத்தம் மௌனித்து விட்ட போதிலும் ஏதோவொரு வகையில் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வண்ணமே ...

மேலும்..

சீமெந்து பக்கெற் விலை அதிகரிப்பு!

வற் வரி அதிகரிப்பால் சீமெந்து  ஒரு பக்கெற்றின்  விலை  150  ரூhபாவிலிருந்து  350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக  உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள   மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மேலும் ...

மேலும்..

கன்னியாஸ்திரிகள் மடத்தில் மட்டக்களப்பில் திருட்டு!  சந்தேகநபர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நான்கு விடுதிகளில் இருந்து நான்கு கையடக்கத் தொலைபேசிகள் ஏ.ரி.எம் அட்டை, அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாக்கள், இலங்கை ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் விடுத்தார்! தமிழ் அரசியல்கைதி தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார் மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் என்னை முழங்காலில் ...

மேலும்..

காட்டு யானைமீது மோதுவதை தவிர்க்க முயன்ற பால் பவுஸர் கவிழ்ந்து விபத்து!

தம்புள்ளை - மஹியங்கனை வீதியிலிருந்து புத்தல பிரதேசத்தை நோக்கி பயணித்த பால் பவுஸர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வீதியில் வந்த காட்டு யானை மீது மோதாமல் இருக்க பால் பவுஸரின் சாரதி முயன்ற போதே இந்த விபத்து ...

மேலும்..

மட்டக்களப்பில் வீதியோர கடைகள் திடீர் முற்றுகை: 7 கடைகளில் பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை வியாழக்கிழமை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதன்போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கெரட், கருவாடு, வாழைப்பழம், தோடம்பழம், இனிப்புப் பண்டமான பூந்தி போன்ற ...

மேலும்..

மக்கள் பொறுமையாக இருந்தால் பொருளாதாரத்தை எம்மால் ஸ்திரநிலைமைக்குக் கொண்டுவர முடியுமாம்!  அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்

வற்வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும் மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்குக் கொண்டுவர சிறிது காலத்துக்கு அனைத்து மக்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் ...

மேலும்..

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமிழர் விவகாரம், இந்திய பாதுகாப்புக் கரிசனை பேசவில்லையாம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட சந்தோஷ் ஜாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் வழமையாக நடைபெறுகின்ற மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இது அமைந்ததாகவும், தமிழர் விவகாரம் ...

மேலும்..

கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி விக்கிரமசிங்க!

யாழில்  நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் சி தமிழ் சரிகமப நிகழ்வின்  வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை சந்தித்தார்.

மேலும்..

15 லீற்றர் கசிப்புடன் யாழில் தம்பதி கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த ...

மேலும்..

யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே  மர்மப் பொருளொன்று  வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொருளில் ஏசியா 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ...

மேலும்..

தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுப்பது சிறந்தது! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்து

பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல ...

மேலும்..

அதிகாரத்திற்காக மக்களை அடமானம் வைக்கக்கூடாது!  நளின் பண்டார கூறுகிறார்

அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்களை அடமானம் வைக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தனியொருவரால் நாட்டைக் கட்டியெழுப்ப ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் ...

மேலும்..

இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா வலயங்கள் மீள அபிவிருத்தி பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா வலயங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட சிகிரியா, தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன், நகர ...

மேலும்..