இலங்கை செய்திகள்

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தயாசிறிக்குத் தடையுத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்  துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும் இது தொடர்பில் ...

மேலும்..

ஓட்டோ கவிழ்ந்து விபத்து சாரதி, இரு மாணவர் காயம்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஓட்டோச் சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (

மேலும்..

திருத்தியமைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் ரிஷாத் பதியுதீன் திட்டவட்டம்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய ...

மேலும்..

சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே செங்கடலில் இலங்கை போர்க் கப்பல்! ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

  செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, இறக்குமதி பொருள்களின் விலை அதிகரித்து விடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை ...

மேலும்..

வலி நிவாரணி எனப் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக ஊழியர் உட்பட இருவர் கைது

வலி நிவாரணி மாத்திரைகள் எனக் கூறி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் மருந்தகத்திலிருந்து 250 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, மருந்தகத்தின் ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், போதை மாத்திரைகளுடன் நடனமாடிய மேலும் ஒருவர் கைதாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக ...

மேலும்..

முடிந்தால் வடக்குக் கிழக்கிற்கு மட்டுமாவது மாகாணசபை தேர்தலை நடத்தி காண்பிக்குக! ஜனாதிபதி ரணிலிக்கு சுரேஷ் சவால்

13 ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை முதலீடு ...

மேலும்..

யாழ்.மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்விடுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் ...

மேலும்..

போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்புகளில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவும் இணைவு! பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவிப்பு

போதைப்பொருள் தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சுற்றிவளைப்புக்களில் பொலிஸ் போக்குவரத்து பிரிவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியில் பல இடங்களிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, வாகனங்களைச் சோதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு ...

மேலும்..

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி?  செல்வராஜா கஜேந்திரன் கேள்வி

பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா, ...

மேலும்..

ஜனாதிபதியின் வவுனியா வருகையால் பயனில்லை! நடந்தது சம்பிரதாய நிகழ்வே என்கிறார் செல்வம் எம்.பி.

ஜனாதிபதியின் வவுனியா வருகை சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ...

மேலும்..

உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்க! குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது. அதன்போது ஜனாதிபதியிடத்தில், ‘சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்’ எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார். அதேநேரம், ‘மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்’ எனும் தலைமையில் உள்ள குறித்த மகஜரில் – இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை. தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாதனவாகவே இருக்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போராலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதுவும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம். இவ்வகையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது. நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.எச்.சிஃ3861ஃ2007) வழக்கை எதிர்கொண்டு ’15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்’ என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர். மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவதன் மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற ...

மேலும்..

ரணிலின் வடக்கு விஜயம் ஒரு வெற்றுப் பயணமாம்! யாழில் பிமல் ரட்ணாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத -மக்களின் வரிப்பணத்தை வீணடித்த - வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

5 டிப்பர் வாகனங்களும் சாரதிகளும் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு மற்றும் மயில்வாகரபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 5 டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய வீதி சோதனைகளின் மூலம் குறித்த ...

மேலும்..

வடக்கை ஏனைய மாகாணங்களைப் போன்று   சமமாகப் பார்ப்பதே ஜனாதிபதியின் நோக்கம்!  சமன்ரத்னபிரிய கூறுகின்றார்

வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களை போன்று பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் சமனாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருக்கிறது என ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்னபிரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் ...

மேலும்..

அரசை வீழ்த்துவதற்கான மக்களின் ஒரேதெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே நாலக கொடஹேவா கூறுகிறார்

  தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதே எமக்குள்ள ஒரே தெரிவாகும் என்று தெரிவித்துள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான கலாநிதி நாலக கொடஹேவா, சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தனித்தனியாக சுயாதீனமாகவே தீர்மானத்தை எடுத்துள்ளனர் ...

மேலும்..