இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலிகளால் கடும்சிரமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் ...

மேலும்..

பிரித்தானிய இளவரசி ஆன் யாழ் விஜயம்! வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன்  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் ...

மேலும்..

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்த பின் முதலீடுகளில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  இருவருக்கிடையிலான சந்திப்பு புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ...

மேலும்..

மன்னார் நகரசபை முறையற்ற கழிவு முகாமைத்துவ செயற்பாட்டினால் தொற்றுநோய் பரவுகின்ற அபாயம்!  

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதால் டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் நகரசபை முன்னதாக பாப்பா மோட்டை பகுதியில் ...

மேலும்..

சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான உயர் ரக சிகரெட்டுகள் சரக்குப் பொதிகளிலிருந்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றல்!

வெளிநாடுகளில் இருந்து வந்த கொள்கலன்கள் மற்றும் சரக்குப் பொதிகளில் இருந்து சுமார் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க வெளிநாட்டு உயர் ரக சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சொந்தமான சரக்குப் பொருள் ஏற்றி இறக்கும் ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநர்மீது எமக்கு நம்பிக்கையில்லை! லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

நாட்டின் நிதி நிலைமை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. உண்யை மூடி மறைத்தார். ஆகவே மத்திய வங்கி ஆளுநர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விசேட ...

மேலும்..

பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாக வாழ பொறுப்புக்கூற தேவையில்லாத மக்கள்மீது தண்டனை! கபீர் ஹாசீம் காட்டம்

  பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாகவும் உல்லாசமாகவும் வாழும் நிலையில் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத நாட்டு மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய செயற்படுவதாக இருந்தால் அரசாங்கம் என்பதொன்று தேவையில்லை. நிதியமைச்சை நாணய நிதியத்துக்கு பொறுப்பாக்கலாம். நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதில் ...

மேலும்..

மத்தியகுழுவைக்கூட்ட தமிழரசுக்கட்சி தலைவர் முடிவு: அரசியல்குழு உறுப்பினர்கள் சிலர் விரும்பவில்லையாம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சோ.சேனாதிராசா முடிவு செய்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த கூட்டத்தை வவுனியாவில் நடத்துவதற்கு அவர் எதிர்பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், கூட்டத்தை அழைப்பதற்கான காரணம் மற்றும் ...

மேலும்..

மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் உரிய விசாரணை இடம்பெற்று வருகிறது! சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி

மில்லியன் கணக்கான மக்களை வாழவைக்கும் நாட்டின் இலவச சுகாதார சேவை தொடர்பில் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும்  பிரசாரங்கள் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் மருந்து கொள்வனவின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகளால்  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன ...

மேலும்..

தனியார் பல்கலை மாணவர்களுக்கான வட்டியில்லா கடனை மீளப்பெற்றுக்கொடுக்க விரைவில் ஏற்பாடு!  சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

உயர் கல்வியைத் தொடர்வதற்கு தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில்லாத கடன் வழங்கும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை மீள பெற்றுக்கொடுக்க திறைசேரியுடன் விரைவில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம் என  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரி இரண்டாம் கட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் குறித்து அவதானம்! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சில் ஈடுபட்டுள்ளார். வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையினால் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானோர் கடனாளிகள் எம்.உதயகுமார் சுட்டிக்காட்டு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 22.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில்  பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது ...

மேலும்..

மருந்து மோசடியுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாத்த அனைவரும் தேசத்துரோகிகள்! சஜித் பிரேமதாஸ சாட்டை

மருந்து கொள்வனவு திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளை தூக்கினர். இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள், தேசத் துரோகிகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

முதல் காலாண்டுக்குள்ளே வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் நம்பிக்கை

வெளிநாட்டு கடன்களை முதல் காலாண்டுக்குள் மறுசீரமைத்து இரு தரப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம். வரி வலையமைப்பை விரிவுப்படுத்துவதற்காகவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. வரி கோப்பு ஆரம்பிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ...

மேலும்..

உண்மை நல்லிணக்க இடைக்கால செயலகம் கிழக்கில் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவு மற்றும் பரிந்துரைகளைச் சேகரிக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தறிதல் நடத்தப்படுகிறது. கிழக்கு மாகாண ...

மேலும்..