இலங்கை செய்திகள்

உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வுகண்டபின் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுக! கர்தினால் மல்கம் ரஞ்சித் இடித்துரைப்பு

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர், உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  எனக் குறிப்பிட்டுள்ளார். பொரளை ...

மேலும்..

ஒருசீனா கொள்கையில் இலங்கை உறுதியாம்! அலி சப்ரி கூறுகிறார்

ஒரு சீனா கொள்கையில் உறுதியாகயிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் இறைமையை வலியுறுத்தும் வில்லியம் லாய் சிங் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே இலங்கை மீண்டும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. தாய்வானில் தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஒரு சீனா கொள்கைகளை ...

மேலும்..

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியாவில் தொடர் சட்ட போராட்டம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான தொடர் சட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு - மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மீதான ...

மேலும்..

வவுனியா தாண்டிக்குளம் பாடசாலையில் திருட்டு! பொலிஸார் விசாரணை

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டமை தொடர்பில்  பாடசாலை ...

மேலும்..

மூன்று கிலோ ஐஸ் போதையுடன் வத்தளையைச் சேர்ந்தவர் கைது!

மூன்று கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு புத்தளம் இராணுவப் ...

மேலும்..

கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிகளை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச்  சந்தித்து கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் ...

மேலும்..

அழிவடைந்துள்ள தேசத்தைக் காப்பாற்ற விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களல்லர்! அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டு

அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம்  சரியாக அவதானித்தால் கடந்த நாடாளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ...

மேலும்..

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தேசிய மாநாட்டில் ஈரோஸ் அறிவிக்கும்!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தேசிய மகாநாட்டில் அறிவிக்கவுள்ள ஈரேஸ் ஜனநாயக முன்னணி தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதென்பது முக்கியமான விடயம். எழுந்தமானமாக அதற்கான பதிலை கூறிவிடமுடியாது அந்த தெரிவு தமிழ்பேசும் சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலுள்ள சாதகபாதக நிலைகளை ஆராய்வதோடு ...

மேலும்..

லசந்தவையும் வாசிம் தாஜூடீனையும் கொலைசெய்தது யார் என்பது தெரியும் மேர்வின் அதிரடிக் கருத்து

லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீனை கொலை செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இருவரும் கொலை செய்யப்பட்டவேளை ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய மேர்வின் சில்வா உரிய நேரத்தில் இந்த கொலைகளிற்கு யார் காரணம் ...

மேலும்..

சமூக சேவையாளர் கௌரவிப்பு நிகழ்வு!

கோண்டாவில் நெட்டிலிப்பாயில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் சமாதான நீதிவானும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் லயன் துரை பிரணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். லயன் துரை பிரணவனின் சழூக சேவைக்காகவும் நீதி அமைச்சால் சமாதான நீதிவான் பதவி பெற்றமைக்காகவும் அவரது சேவைகளை மேலும்; ...

மேலும்..

துறைமுகத்துக்கு சென்றதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன்! திஸ்ஸ குட்டியராச்சி களிப்பில்

பொருளாதாரப் பாதிப்பால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது. இருப்பினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்குத் தயாராகவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார். பொதுஜன ...

மேலும்..

ரயிலால் மோதப்படுவதை தவிர்க்க கெப்பிலிருந்து பாய்ந்தார் நபர்!

வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்த கெப் வாகனம் ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார் என வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் வெலிகந்தை - மொனராதென்ன பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார். மட்டக்களப்பில் ...

மேலும்..

ஒடுக்கப்படும் மக்கள் உரிமைப் போராட்டம் அவர்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது! அருட்தந்தை மா.சத்திவேல் இடித்துரைப்பு

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் ...

மேலும்..

யுக்திய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.மனிதவுரிமை ஆணையர் கவலை

இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு பதில் கடுமையான பாதுகாப்பை அடிப்படையாகக் ...

மேலும்..

மக்களை அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டு உலக நாடுகளில் மனித உரிமை பேசுகிறார் ரணில்! செல்வராஜா கஜேந்திரன் காட்டம்

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகிய இருவரும் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறைக்கு ...

மேலும்..