இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்வு திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு!

  (ஹஸ்பர் ஏ.எச்) மனிதவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் பொது நூலகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கான பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சர்வதேச புலம் பெயர்தலுக்கான அமைப்பின் மூலம் புதன்கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வு திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. ...

மேலும்..

தர்மத்தின் அடிப்படையில் மக்களை நேசிக்கும் ஆட்சியாளர்களை நாம் உருவாக்க வேண்டும்! புதுவருடச் செய்தியில் கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்து

எவர் ஆட்சியில் இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் மக்களை நேசிக்கவேண்டும். உண்மையான சத்திய ஆட்சி உருவாக வேண்டும். எல்லா மக்களுக்கும் பூரண சுதந்திரம் கிட்ட வேண்டும். - இவ்வாறு தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி ...

மேலும்..

யாழ்.மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

2024 ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை உலகம் முழுவதிலும் இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம். 2023 ஆவது  ஆண்டு ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் மாற்றத்தை கண்டு அஞ்சுகிறார் ஜனாதிபதி ரணில்! சஜித் பெருமிதம்

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியாக மாற்றமடைவதைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சமடைமந்துள்ளார். அதன் காரணமாகவே ஊடக வலையமைப்புக்கள் ஊடாக எமக்கெதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் எமது உயர்வைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ...

மேலும்..

புத்தூரில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் - புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சனிக்கிழமை பெற்றோல் குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலால் வீட்டின் முன்பகுதி ...

மேலும்..

இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த நபர் கைது!

கல்னெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அவுக்கண பிரதேசத்தை சேர்ந்த லலித் சந்திரகுமார என்ற 46 வயதுடைய முன்னாள் கடற்படை வீரராவார். இவர் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி உதயம்! அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்த அந்த கூட்டணியின் செயற்பாட்டு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷ யாப்பா, நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவரை ...

மேலும்..

தங்க பிஸ்கெட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  வெளியேறும் முனையத்தில் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தின் பணியாளர்கள் வெளியேறும் வாயில் வழியாக ...

மேலும்..

பிலியந்தலை பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: உரிமையாளரும் இரண்டு பிள்ளைகளும் காயம்! பொருள்கள் நாசம்

பிலியந்தலை மாவித்தபுரவில் வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத பட்டாசு  உற்பத்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்! சாணக்கியன் நம்பிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை என்று அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்!  மாவை உத்தரவாதம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனதிராசா தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு ஜனவரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டமிட்ட வகையில் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனினும், கட்சியின் சிரேஷ்ட ...

மேலும்..

பாதை மாறுவோமானால் சர்வதேசம் கைவிடுமாம்! மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பில் எந்தவொரு அரசாங்கமும் மீள்பேச்சை நடத்தலாம். ஆனால் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதையைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2023 ...

மேலும்..

தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய கூட்டணியில்  பங்கேற்பதே சாணக்கியம்!  அமைச்சர் விஜயதாஸ ‘அட்வைஸ்’

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஷ ...

மேலும்..

கதிரானவத்தை குணா’ மட்டக்குளியில் கைது!

மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் வியாழக்கிழமை போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கதிரானவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 'கதிரானவத்தை குணா' என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய வீட்டை பொலிஸார்  சோதனையிட்ட ...

மேலும்..

தம்புள்ளை ஹோட்டல் அறையில் இருந்து சந்தேகத்துக்குரிய வாகன தகடுகள் சிக்கின

தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள இரு வர்த்தகர்களுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போது அறையொன்றிலிருந்து பல வாகனத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஹோட்டலில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோட்டலில் ...

மேலும்..