உலகச் செய்திகள்

22 டன் சீன ரொக்கட்டின் மிகப் பெரிய பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது !

சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரிய வந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ...

மேலும்..

மெக்ஸிகோ நாட்டில் மெட்ரோ புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

மெக்ஸிகோ நாட்டின் மெக்ஸிகோ நகரில் நேற்று (03) இரவு தொடருந்து மேம்பாலம் ஒன்று மெட்ரோ தொடருந்துடன் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த இடிபாடுகளின் கீழ் பல வாகனங்கள் ...

மேலும்..

வங்கதேசத்தில் கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி!

வங்கதேசத்தில், மணல் ஏற்றிச்சென்ற கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததால், 26 பேர் பலியாயினர். வங்கதேச தலைநகர் டாகாவில், பங்களா பஜார் பகுதியில், பத்மா ஆற்றின் படித்துறையில் இருந்து, நேற்று ஒரு படகு பயணியருடன் புறப்பட்டது. முறையான பயிற்சி பெறாத ஒரு சிறுவன், படகை ...

மேலும்..

உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியது!

இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ...

மேலும்..

அப்பல்லோ 11 விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ் மரணம்!

சந்திரனில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் உறுப்பினரான விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயுடன் போராடி வந்த கொலின்ஸ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். “புற்றுநோயுடன் ஒரு வீரம் நிறைந்த போருக்குப் பிறகு, எங்கள் அன்புக்குரிய தந்தையும் ...

மேலும்..

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார். 89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய ...

மேலும்..

நைஜரில் பாடசாலையில் தீ விபத்து! 20 மாணவர்கள் பலி!

நைஜரில் பாடசாலையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பாடசாலை ஒன்று உள்ளது. இங்கு ...

மேலும்..

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க் 2 ம் பெற்றுள்ளார். கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். ...

மேலும்..

தாய்வானை உலுக்கிய கோர விபத்து! – 50 பேர் பலி! பலர் கவலைக்கிடம்!

தாய்வானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை ...

மேலும்..

சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் மிதக்க ஆரம்பித்துள்ளது

உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கப்பல் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், சுமார் 300க்கும் அதிகமான ...

மேலும்..

இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடல் பாகங்கள் ...

மேலும்..

சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய முயற்சி!

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 14 ட்ரக் இயந்திரங்கள் நேற்று இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக சுயெஸ் கால்வாய் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ...

மேலும்..

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனால் உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது. கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் ; எதிராக 22 நாடுகள் வாக்களிப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் 14 நாடுகள் வாக்களிப்பில் களந்து ...

மேலும்..

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி!

அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..