October 31, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம் – தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்க முடிவு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மாவை சோ. சேனாதிராஜா செயற்படுவார் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ...

மேலும்..

கொரோனா நோயாளிகளுடன் யாழ். வந்த 6 பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து விட்டு தலைமறைவு – பொலிஸார் தேடுதல் வேட்டை…

"யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்குக்  கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள்! – வடக்கு மக்களைப் புகழ்ந்து தள்ளும் இராணுவத் தளபதி…

"வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம்." - இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான  லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கிளிநொச்சிக்கு ...

மேலும்..

ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமை பாதிக்கப்பட்டோரின் முகத்திலறையும் செயல்…

ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமை பாதிக்கப்பட்டோரின் முகத்திலறையும் செயல் - சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் சாடல் "ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராக ...

மேலும்..

மழை காரணமாக ஆயித்திய மலை மகிழவெட்டுவான் வீதி நெல்லூர் பகுதியில் சிதைவு, நேரடி விஜயம் மேற்கொண்ட பா.உ கருணாகரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை…

மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் வீதியானது நெல்லிக்காடு (நெல்லூர்) பிரதேத்தில் நீர் வடிந்தோடிய நிலையில் குறுக்காகச் சிதைவுற்று மக்கள் பயன்படுத்த முடியாதளவில் சிதைவுற்றது. இது தொடர்பில் பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினைத் ...

மேலும்..

வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 15 நபர்கள் கைது…

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை நேற்று மதியம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புளியங்குளம். பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்ணமி தின விசேட பூஜை வழிபாடுகள் ...

மேலும்..

இன்றும் 239 பேருக்கு கொரோனாத் தொற்று…

இலங்கையில்  239 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் இருந்தவர்களும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்குமே  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 663 ஆக ...

மேலும்..

யாழ். மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு…

யாழ்ப்பாணம் மாநகரத்துக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இன்றிலிருந்து 14 நாட்கள் கட் டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட் அறிவித்துள்ளார் இன்று யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான ...

மேலும்..

மற்றுமொரு நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – இதுவரை இருவர் பாதிப்பு; அச்சத்தில் ஏனைய செய்தியாளர்கள்…

மற்றுமொரு நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - இதுவரை இருவர் பாதிப்பு; அச்சத்தில் ஏனைய செய்தியாளர்கள் சிங்கள பத்திரிகைப் ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் நாடாளுமன்ற செய்தியாளராகக் கடமையாற்றி வந்துள்ளார். அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான ...

மேலும்..

வடக்கினைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று கண்டறியப்படவில்லை…

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 308 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கினைச் சேர்ந்த எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதேவேளை, குறித்த பரிசோதனையில் வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள சேர்ந்த எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது.

மேலும்..

கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஏகோபித்த ஆதரவு…

கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஏகோபித்த ஆதரவு அனைத்து உறுப்பினர்களும் வழங்க வேண்டும் என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை அனைத்து உறுப்பினர்களும் ...

மேலும்..

வவுனியா கூமாங்குளம் இளைஞருக்கு கொரோனா சந்தேகம் : வெளியான பிசீஆர் பரிசோதனை…

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (30.10.2020) கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவு  இன்று (31.10) இரவு வெளியாகிய நிலையில் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வெளியாகியுள்ளதாக வவுனியா ...

மேலும்..

தமிழ்நாட்டை விட 70% குறைவான மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியா…

தமிழ்நாட்டை விட 70% குறைவான மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியா:  ‘மக்கள் தொகை பெருக்கம்’ பற்றி ஆஸ்திரேலியர்கள் நினைப்பது என்ன?  ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டமான அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் ஆஸ்திரேலிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு மூலம். அந்நாட்டில் பலர் மக்கள் தொகை பெருக்கத்தை  விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. எங்கள் கருத்துக்கணிப்புகள் மூலமும் பிற கருத்துக்கணிப்புகள் ...

மேலும்..

கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சி நாச்சிக்குடாவில் சம்பவம்…

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலியாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் ...

மேலும்..

தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும்…

பாறுக் ஷிஹான் கலையரசன் எம்.பி கூட கல்முனையை காப்பாற்றுவதாக கூறுவதானது மக்களை அவரும் கட்சியும் ஏமாற்ற முயற்சிப்பதாகும். தமிழ் உப பிரதேச  செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும் என    உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் ...

மேலும்..

கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் மூடல்; 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனா உறுதி – பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் தனிமைப்படுத்தல்…

கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் கொரோனா அச்சம் காரணமாக இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடலோரப் பொலிஸ் நிலையச் செயற்பாடுகள் ...

மேலும்..

தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (31.10.2020) பெறப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தலவாக்கலை – தெவிசிறிபுர, கொட்டகலை, வூட்டன் மற்றும் ரொசிட்டா, ...

மேலும்..

அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பவே முடியாது கோட்டா அரசு – அழுத்திக் கூறுகின்றது கூட்டமைப்பு…

"பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பொறுத்தவரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா நேரடியாகவும் ...

மேலும்..

உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கும் சுகாதார பரிசோதகருக்கும் முறுகல் நிலை…

(க.கிஷாந்தன்) கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூடப்பட்டிருந்த வர்த்த நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு உள்ளாட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. அட்டன் – டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்துக்குட்பட்ட ...

மேலும்..

மஹிந்தவை பொம்பியோ புறக்கணித்தமைக்கு சமாளிப்பு காரணம் கூறும் பிரதமர் அலுவலகம்…

"அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது. அதனாலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மைக் பொம்பியோவைச் சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கவும் இல்லை." - இவ்வாறு பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் ...

மேலும்..

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41ஆயிரத்து 500 மாணவர்கள் சேர்ப்பு…

இலங்கையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தத் தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது…

பாறுக் ஷிஹான். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  (2020-10-26) அன்று மதியம்   விளினையடி சந்திக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட  பல்சர் ரக மோட்டார் ...

மேலும்..

கொரோனா பாதுகாப்பு தொற்று நீக்கி விசிறல்…

ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோணா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பொது இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வீதிகள், வியாபார நிலையங்கள், வங்கிகள், ...

மேலும்..

முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை…

பாறுக் ஷிஹான். கலையரசன் எம்.பி கூட கல்முனையை காப்பாற்றுவதாக கூறுவதானது மக்களை அவரும் கட்சியும் ஏமாற்ற முயற்சிப்பதாகும். முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை என    உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள ...

மேலும்..

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 31 நபர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற இடங்களில் கடமையாற்றியவர்கள், வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் விபரங்கள்,திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து ...

மேலும்..

பலத்த இடி மின்னல் மழை காரணமாக மின் மானிகள் எரிந்து நாசம்.இரவு வேளையில் மக்கள் அச்சத்தில் கல்முனையில் சம்பவம்…

கல்முனை பகுதியில் நேற்று (30) மாலை வேளையில் சில மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய இடைவிடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக கல்முனை கிரீன்ஃபீல்ட் மக்கள் குடியிருப்பில் 27 ஆம் இலக்க தொடர் மாடியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானிகள் திடீரென தீப்பற்றி ...

மேலும்..

காட்டு யானை தாக்கியதில் நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதம்…

காட்டு யானை தாக்கியதில்  நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவில் வெள்ளிக்கிழமை(30) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில்  விவசாய நடவடிக்கையின் போது பயிரிடப்பட்டிருந்த வீட்டுத்தோட்டம் உட்பட நெற்களஞ்சிய அறை என்பன சேதமாக்கப்பட்டதுடன் உரப்பையில் பாதுகாப்பாக கட்டப்பட்ட ...

மேலும்..