September 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திரிபோஷா நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட நியமங்களுக்கு அமைய உற்பத்தி செய்யப்படும் திரிபோஷா சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என சிலோன் திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தத் தயாரிப்புகளுடன், திரிபோஷ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சோளக் கையிருப்பிலுள்ள அஃப்லாடொக்சின் சதவீதம் குறித்த அறிக்கையும் அனுப்பி வைக்கப்படும் என்று ...

மேலும்..

10 மணி நேர மின் வெட்டு ஏற்படும் சாத்தியம் ; ஜனவரி முதல் நிலைமை தீவிரமாகும்

சி.எல்.சிசில்- நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை ...

மேலும்..

பந்துல குணவர்தனவின் ரஷ்ய பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதா?

தனது சமீபத்திய ரஷ்ய பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தனது சொந்த செலவில் அண்மையில் தயாரித்த ...

மேலும்..

கண்டி மாநகர சபை நீர் விநியோகத்திற்கான கட்டணத்தை அதிகரிக்கிறது

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் விநியோகத்திற்கான கட்டணத்தை 25 வீதத்தால் அதிகரிக்க கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போதைய 30 வீதத்தில் இருந்து 55 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. நகர்ப்புற மக்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் சபைக்கு ...

மேலும்..

பாடசாலை பாடத்திட்டத்தில் சைகை மொழியை அறிமுகப்படுத்த வலியுறுத்தி போராட்டம்

விசேட தேவையுடைய பிள்ளைகளின் பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய பாடமாக சைகை மொழியை அறிமுகப்படுத்துமாறு கோரி மொனராகலை நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய சிறுவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும்..

ஐந்து முச்சக்கர வண்டி திருடர்கள் கைது

முச்சக்கரவண்டிகளை திருடுவதில் ஈடுபட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் ஒன்றின் சந்தேக நபர்கள் ஐவர் மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல, வெலிக்கடை, முல்லேரிய மற்றும் மீகொட பிரதேசங்களில் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

நடு வீதியில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்!

அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளதாக மிகிந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான காவல்துறை உத்தியோகத்தர் மிகிந்தலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது திருகோணமலை வீதியில் கருவலகஸ்வெவ ...

மேலும்..

உலக சந்தையில் திடீர் என வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெயின் விலை!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, நேற்றையதினம் அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெயின் விலை 7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.   பிரண்ட் ...

மேலும்..

சீன அரசாங்கத்தால் மீண்டும் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட உதவி!

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விசேட சரக்கு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் ஏற்றிய இந்த சரக்கு விமானம் இன்றுவந்தடைந்துள்ளது. இலங்கையில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய தொகுதி ...

மேலும்..

கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்! காவல்துறை குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் ...

மேலும்..

நந்திக்கடல், நாயாறு, சாம்பல்தீவு குளங்கள் வனப் பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும்: அமரவீர

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு மற்றும் நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ...

மேலும்..

வெளிநாட்டுப் பெண் மீது கசூரினா கடற்கரையில் பாலியல் தொல்லை : கைதான 10 இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

ஸ்பெயின் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம், காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ். காரைநகர் கசூரினா கடற்கரைக்கு  வியாழக்கிழமை (22) மாலை சுற்றுலா சென்றுள்ளனர். அப்பகுதியில் மதுபோதையில் இருந்த 10 இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வெள்ளிக்கிழமை (23) 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட 2ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது. மழை காரணமாக ...

மேலும்..

கொழும்பின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்:அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்படாவிட்டால், உயர் ...

மேலும்..

தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் – ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம்

பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளே முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள், மனித உரிமைப் பேரவை பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில், 22 செப்டம்பர் 2011 புதன்கிழமை அன்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களான மாவை. ...

மேலும்..

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு மூலம் குறித்த பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் சுயாட்சி கொண்டதாக ...

மேலும்..

குருந்தூர் மலை விகாரை நிர்மாணத்தை கைவிடப்போவதில்லை – சரத் வீரசேகர சூளுரை

தொல்பொருள் திணைக்களத்தால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாகவும் சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ...

மேலும்..