அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு- தவறின் கடும் தொழில்முறை நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயமாக கொழும்பு நீதிமன்ற வளாகம்

“அரச இரகசியங்கள்” சட்டத்தின் விதிகளின்படி, கொழும்பு நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கொழும்பு நீதிமன்ற வளாகத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக நியமிப்பதற்கான தீர்மானம் எவ்வித அவசர தேவையுமின்றி எடுக்கப்பட்டதாகவும் அது சட்டத்தின் ஆட்சியில் தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாகவும் சங்கத்தின் செயலாளர் ரசிக்க சஞ்சீவ பமுனுஹேந்தர தெரிவித்துள்ளார்.

அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு- தவறின் கடும் தொழில்முறை நடவடிக்கை | Deadlines Imposed By Govt

அமைதியான முறையில் போராட்டம்

 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஹதீஸ் பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நண்பகல் 12.00 மணிக்கு, வர்த்தமானி அறிவிப்பில் இருந்து மேற்படி முடிவை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாளை (27ஆம் திகதி) பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு- தவறின் கடும் தொழில்முறை நடவடிக்கை | Deadlines Imposed By Govt

உயர்பாதுகாப்பு வலயப் பட்டியலில் இருந்து நீதிமன்ற வளாகத்தை நீக்குவது தொடர்பில் அதிபர் மற்றும் நீதி அமைச்சருடன் கலந்துரையாடி உரிய வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலனை செய்ய தமது தொழிற்சங்கம் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அந்த நடவடிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காத பட்சத்தில் கடுமையான தொழில்முறை நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.