மருத்துவ பீடத்தை நிறுத்த கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை நிறுத்துமாறு கோரி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த நிலையில், பின்னர் கொழும்பு பதுளை பிரதான வீதியில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.