ஹரீஸ் 20க்கு ஆதரவளித்த நோக்கத்தை கல்முனை மக்கள் அறிவர் : இப்போதைய அவரின் தீர்மானம் சரியே – ஐக்கிய காங்கிரஸ்.

நூருள் ஹுதா உமர்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹ‌ரீஸ் 20க்கு ஆத‌ரித்த‌து ப‌த‌விக்கு ஆசைப்ப‌ட்ட‌ல்ல‌ என்ப‌தை நாம் அறிவோம். க‌ட‌ந்த‌ ஆட்சியில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், ஆளுன‌ர்க‌ள் ராஜினாமா செய்ய‌ வேண்டும் என‌ இன‌வாத நோக்குடன் ர‌த்ன‌தேர‌ர் உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ போது அனைவ‌ரும் ராஜினாமா செய்து பின் அமைச்ச‌ர்க‌ள் மீண்டும் ப‌த‌வி பெற்ற‌ போது எச்.எம்.எம். ஹ‌ரீஸ் ம‌ட்டும் அமைச்சு ப‌த‌வியை நிராக‌ரித்தார். அது போன்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம். ஹ‌ரீஸ் 20க்கு கை உயர்த்தியமைக்கான‌ கார‌ண‌ம் க‌ல்முனை பிர‌ச்சினையாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி கலாபூசணம் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ள விடயமானது, அரசினால் கொண்டுவரப்பட்ட 20க்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹ‌ரீஸ் ஆதரவளித்ததன் மூல‌ம் எதிர்கட்சி தலைவர் ச‌ஜித் பிரேமதாசவின் கூட்டிலிருந்தும் முஸ்லிம் காங்கிர‌சிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். மு. காவிலிருந்து அவ‌ர் வெளியேறிய‌தாக‌ அவ‌ர் ஏற்காத‌ போதும் வெளியேறினார் என்ப‌தே நித‌ர்ச‌னம்.
எச்.எம்.எம். ஹ‌ரீஸ் 20க்கு கை உயர்த்தியமைக்கான‌ ஒரே கார‌ண‌ம் க‌ல்முனை பிர‌ச்சினையாகும். இத‌னால் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின‌ராகிய‌ நாம் அவ‌ரை வாழ்த்தியிருந்தோம். க‌ல்முனை முஸ்லிம்க‌ளில் 90 வீத‌மானோர் எச்.எம்.எம். ஹ‌ரீசின் இந்த‌ செய‌லை உள்ளார்ந்த ரீதியாக பாராட்டின‌ர் என்ப‌தே உண்மை.
பின்ன‌ர் பொதுஜ‌ன‌ அர‌சின் மோச‌மான‌ ஆட்சி கார‌ண‌மாக‌ 20ஐ ஆத‌ரித்தோரும் செய்வ‌த‌றியாது முழித்த‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை சாத‌க‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌ மு.கா தலைவர் ர‌வூப் ஹ‌க்கீம் எச்.எம்.எம்.  ஹ‌ரீசுக்கெதிராக‌ கிழ‌க்கில் அணி சேர்த்தார். த‌ற்போது பொதுஜ‌ன‌முன‌ பெர‌முன‌ அர‌சு ஒழிந்து ரணில் அர‌சு ஏற்ப‌ட்டுள்ள‌ நிலையில் ர‌வூப் ஹ‌க்கீம் எந்த‌ப்ப‌க்க‌ம் இருக்கிறாரோ அதே ச‌ஜித் ப‌க்க‌ம் ஹ‌ரீஸ் சென்ற‌து மிக‌ச்ச‌ரியான‌ தீர்மான‌மாகும்.
ஆனாலும் ர‌ணில் ஆட்சியில் க‌ல்முனை பிர‌ச்சினை தீருமா அல்ல‌து இன்னும் கொதிப்ப‌டையுமா என்ப‌தெல்லாம் அடுத்து வ‌ரும் சோடாப்போத்த‌ல் அர‌சிய‌லாகும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்