ஆசிரியர்களை உருவாக்க தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்: கல்வி அமைச்சர்

 

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர் பணிக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம். நாங்கள் மூன்று வருட கோட்பாட்டு ஆய்வுப் பயிற்சியையும் ஒரு வருட ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறோம். நான்கு ஆண்டுகளுக்குள், தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைவார்கள். ஆசிரியர் கல்வி சேவையையும் இணைத்து இந்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.