மகிந்தவின் பிறந்ததினத்திற்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் – எதிர்வு கூறலை வெளியிட்ட ஜோதிடர்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர், மகிந்த ராஜபக்சவுக்கு நல்ல காலம் பிறக்க உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவிற்கு நல்ல காலம்
அதேவேளை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினம். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தற்போது பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக மீண்டும் பதவிக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டதால், பிரதமர் பதவியை அவருக்கு வழங்க தினேஷ் குணவர்தன இணங்கயுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை