அரசாங்க சதிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவ மாணவர்கள்

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றை விற்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.