இராஜகிரியவைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருவர் கைது!
இராஜகிரிய வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் சங்கிலி பறிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து தங்கச் சங்கிலி மற்றும் மூன்று கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 28 வயதுடைய இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை