பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்
பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இரண்டு பெருந்தோட்ட நிறுவனங்களிலேயே இந்த பிரச்சினை காணப்படுவதாகவும் இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை