மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்திற்குள் அபாயகர வெடி பொருள்!
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உழவு இயந்திர பெட்டிக்குள் இருந்து கண்ணிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு கழிவு மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திர பெட்டிக்குக்குள்ளேயே வெடிக்காத நிலையில் இருந்த கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணிவெடி நேற்றைய தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
மணல் ஏற்றும் இடத்தில் வேலை செய்த நபர் ஒருவராலேயே கண்ணிவெடி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, உடனடியாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல்துறையினர் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையின் தலைமையில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
கருத்துக்களேதுமில்லை