கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது
28/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. ப. சசிகரன் தலைமையில் இடம்பெற்றது.

71 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்மற்றும் பாதணிகள்
வழங்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு. பெ. விவேகானந்தன், திரு. மு. செல்வக்குமார், திரு. லோசன், திரு. புவிராஜ் ஆகியோரினால் கல்விகற்கும் மாணவர்களுக்கு பெறுமதியான பாடசாலை உபகரணங்கள்மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.                                                                                                                                          இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் இதற்குரிய முற்று முழுதான நிதி பங்களிப்பை வழங்கிய, இணைந்த கரங்களுடாக கைகோர்த்து இடை விடாது நம் பயணத்தின் நோக்கத்தையும்,நம் மாணவச்செல்வங்களின் வலியையும் உணர்ந்து அடுக்கடுக்காக இணைந்த கரங்களுடாக உதவி வரும் சகோதரி அனு குடும்பத்தினர்,அவர்களது,, உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றார்கள் . இவர்களுக்கு என் நெஞ்சாந்த நன்றியை இணைந்த கரங்கள் ஊடாகவும்,என் சார்பாகவும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.