தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு சாவகச்சேரி நகரசபையில் கண்டனம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருகோணமலை-திருக்கோணேச்சரம் ஆலயத்தின் அபிவிருத்திக்கு தொல்லியல் திணைக்களம் முட்டுக்கட்டை போடுகின்ற செயற்பாட்டினை கண்டித்து சாவகச்சேரி நகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
25/10 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே நகரசபை உறுப்பினர் க.கஜிதன் குறித்த கண்டனப் பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
தொல்லியல் திணைக்களம் திருக்கோணேச்சர ஆலயத்தின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்தியுள்ளது.தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு மற்றும் நில அபகரிப்புச் செயற்பாடு ஆகியன இந்து மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது.எமது பாரம்பரிய நிலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களாகிய எம் அனைவருக்கும் உண்டு.எனவே தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து-தொல்லியல் திணைக்களத்தின் அடாவடியை கட்டுப்படுத்த வேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த கண்டனப் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.