மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கபட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு நிவாரண நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுளளன.

மக்களின் சிரமத்திற்கு முற்று

 

 

குறிப்பாக மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது.

குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்ட போதும் அதன் செயல்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இவ்வாறு இன்றைய தினம் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டிருக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்