கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடங்கியது பிரித்தானியா – குழப்பத்தில் மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடே ஸ்தம்பிதமாகியுள்ளது.

இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், லண்டன் சுரங்க ரயில்கள் இன்னும் சேவையில் ஈடுபட்டுள்ளதையும் அதில் பலர் பயணம் செய்ததையும் காணமுடிந்தது என்றும் பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே “சமூக தொடர்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் அரசாங்கம் முன்வைத்த ஆலோசனையைப் பின்பற்றுதல். மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்” என அமைச்சர் மைக்கேல் கோவ் பிபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்ததால், மேலும் அதிகமாவதை தடுக்க, குறைந்தது மூன்று வாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய  அவசகாலநிலை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.