கொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது!!!

7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) கணித்துள்ளார் பிரிட்டனில் கோவிட் -19 காரணமாக ‘20, 000க்கும் அல்லது அதற்கும் குறைவான ’மக்கள் இறந்துவிடுவார்கள் என, பிரிட்டிஸ் தொற்றுநோயியல் நிபுணரும் நுண் உயிரியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) எதிர்வு கூறியுள்ளார்.

இருப்பினும் தொற்று நோய்களின் பாதையையும், பரவுகையையும் கணிப்பது மிகவும் கடினம் எனவும் அவர் எச்சரிக்கையுடனான ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில்  கோவிட் -19 காரணமாக இதுவரை 4,313 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் பிபிசியின் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் (BBC’s Andrew Marr show) பிரிட்டிஸ் முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் கேட்டதற்கு பதில் அளித்த பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) : “கொரோனா வைரஸ் தொற்றுப் பேரவலத்தின் தன்மைகளைப் பொறுத்தே பிரித்தானிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் கூறமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.”

அத்துடன் சமூகரீதியான தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு திகதியை, குறிப்பிட மறுத்த பேராசிரியர், பொருத்தமான நேரத்தில், பொருத்தமான மாற்று ஏற்பாடுகளுடன் அவை மாற்றி அமைக்கப்படும் எனவும், குறிப்பாக வெகுஜன சோதனை போன்றவை இதில் அடங்கும் எனவும் பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.