அம்பாறை மாவட்ட மக்களுக்காக அளப்பெரிய சேவை ஆற்றியவர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பல்வேறுபட்ட – மக்களுக்குத் தேவையான – விடயங்களை ஆற்றியுள்ளார்.

அம்பாறை மக்களின் மனங்களில் ஆழ ஊடுருவி, அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழகி, அவர்களின் தானும் ஒருவனாகி அவர்களின் மனங்களை வென்ற ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

இந்த மாவட்டத்திற்கான தமிழர்களின் உரிமைக்காக பல தடவைகள் குரல்கொடுத்தவர் தனது அற்பணிப்பான செயற்பாடுகளை செய்த பாராளுமன்ற உறுப்பினர் என்றால் மிகையாகாது.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் , விசுவாசமாகவும் , மக்கள் தொண்டனாகத் தன்னை அடையாளப்படுத்தியவர் அவர்.

வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்ட காலத்திலும், கொரோனா அனர்த்தம் தற்போது ஏற்பட்ட நிலைமையிலும் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பதவியில் தற்போது இல்லாத நிலையிலும்கூட தனது சொந்த நிதியில் மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக பல்வேறு மக்களின் நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில், ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தன்னுடைய மக்களுக்கு எவ்வாறான அபிவிருத்திகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான அத்தனையையும் பெற்றுதந்து தனது மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பேருதவி புரிந்தவர் கோடீஸ்வரன்.

கம்பெரலியா, ரண் மாவத்த, விசேட அபிவிருத்தி ஒதுக்கம் என பலதரப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவுகளை அரசிடமிருந்து பெற்று அப்பாறை மாவட்டத்தில் எவரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர்.

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் என்றும் நன்றிக்கடனுடையவர்களாகத் திகழ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்