மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மே 11 ஆம் திகதி தளரும்! சராவின் வலியுறுத்தலுக்கு பசில் பச்சைக்கொடி
வடக்கு மாகாண வர்த்தகர் கள் பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய மாகாணங்க ளில் இந்த நெருக்கடிகள் எதுவு மில்லை . இது தொடர்பில் கவ னம் செலுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த முன் னாள் அமைச்சரும், அவசர சேவைக்கான ஜனாதிபதி செய லணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ, எதிர்வரும் 11ஆம் திகதியுடன் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடு தளர்த்தப்படும். அதன் பின்னர் இவ்வாறான பிரச்சினை கள் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை யில் நேற்றுக்காலை நடைபெற்ற கூட்டத் தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ஈ.சரவணபவன், கடிதம் ஒன்றை நேரில் வழங்கினார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசா தாரண நிலையில் அரச அதிகாரிகளின் வினைத்திறனான சேவை முக்கியமா னது. தற்போது வடக்கு மாகாண ஆளுநர் வடக்கில் தங்கி நிர்வாகத்தைக் கவனிப் பது அவசியமானது. எனினும் வடக்கு மாகாண ஆளுநர் வடக்குக்கு வெளியே தங்கி நின்றே தற்போது பணிகளை மேற் கொள்கின்றார். அதனால் அதிகாரிகளி டம் இருந்து வினைத்திறனான சேவைக ளைப்பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதுதொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
அதேவேளை, மாவட்டத்துக்கு வெளியே பொருள்களைக் கொண்டு செல்வதற் காகவழங்கும் பாஸ்’ நடைமுறைஷ்யில் வடக்கில் பல குறைபாடுகள் காணப்படு கின்றன. வடக்கில் இந்தப் பாஸ் நடை முறை இறுக்கமாக்கப்பட்டுள்ளதால் வடக் குக்குப் பொருள்களைக் கொண்டுவரு வதில் வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் ஏனைய பாகங்களில் ‘பாஸ்’ நடைமுறையில் இறுக்கம் காணப்படாத நிலையில் வடக் கில் மட்டும் நெருக்குதல்களை மேற் கொள்வது ஏற்புடையதல்ல. அது தொடர் பாகவும் கவனம் எடுக்க வேண்டும் என் றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவண பவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர்ம ஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்திலும் ஆராயப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றிருந்த பஸில் ராஜ பக்ஷ, பாஸ் தொடர்பான நடைமுறைக்கு பதில் வழங்கினார். எதிர்வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பாஸுக்கான தேவை இருக்காது. மாவட்டங்களுக்கு இடையி லான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பதிலளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
.
கருத்துக்களேதுமில்லை