பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) குறித்த அமைப்பு மற்றுமொரு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கூட்டும் நாள், உரிய காலத்தை தாண்டி செல்வதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என கொள்கைக்கான மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.