மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவல்கள் வழமைக்கு திரும்பின

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அநேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அலுவலங்கள் வழமையான பணிகளுக்காக திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களும் ஏனைய திணைக்களங்கள் நியதிச்சபைகள் கூட்டுத்தாபனங்கள் அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ஆடைத்தொழில் சாலைகளும் மட்டக்களப்பில் இயங்கத் தொடங்கியுள்ளன.

அதனடிப்படையில் அலுவலகர்கள் கணிசமான அளவு வருகை தந்திருந்தனர் அலுவலக நுழைவாயிலில் பொதுமக்களுக்கான கைகழுவும் இடம் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் வருபவர்களின் உடல் வெப்பநிலையினை பராமரிக்கின்ற சோதனைகளும் நடைபெறுவதுடன் அலுவலகதிற்கு செல்பவர்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிவதும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.