மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை..

ஜே.எப்.காமிலாபேகம்-நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அண்மையில் விடுக்கப்பட்டது.
சீரற்ற காலநிலை தொடர்ந்தும் உள்ளதால் இந்த அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்