ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் தங்கள் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்வதனால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களின் வாக்குகள் ஒரு போதும் கிடைக்காதென்பதனை அரசியல்வாதிகள் அறிந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மொட்டு கட்சியால் முடிந்தது.

புதிய கட்சி ஒன்று உருவாக்கினால் ராஜபக்ஷர்கள் நடுவீதிக்கு செல்ல நேரிடும் என கூறியவர்களை இணைத்துக் கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட காரணம், நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு சென்று பொருளாதாரத்தை மேற்கொண்டு புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாட்டின் அரசியலை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக புதிய சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்காக புதிய தொழிற்சாலைகளை  உருவாக்குதல், விவசாயம் உட்பட பயிர்செய்கைகளை வளர்ச்சியடைய செய்தல், தொழில்நுட்ப கல்வி ஊடாக தொழில்களை உருவாக்குதல் உட்பட பொறுப்புடன் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக  இதன் போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.