அதிகளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! – (மட்டக்களப்பு – வாழைச்சேனை) சம்பவம்!!!!!!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாலைநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
குறித்த இளைஞனிடம் இருந்து 1,538 போதை மாத்திரைகள், 2000 மில்லி கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றினர். (150)
கருத்துக்களேதுமில்லை