திருமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- அலஸ்தோட்டம்  கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் இன்று ( 19) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் தனிமையாக வாழ்ந்து வந்த 46 வயதுடைய நபர் எனவும் இவர் திருமணமாகாத நிலையில் இருந்தவர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் தற்போது அனஸ் தோட்டம் பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் இருப்பதாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலி பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்