ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நியமன கடிங்கள் அம்பாறையில் வழங்கி வைப்பு.

அம்பாறை மாவட்டத்தில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின்  கீழ் 20  பேருக்கு அரச நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பேருக்கான அரச நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை பொதுஜன பெரமுன அமைப்பாளர் அலுவகத்தில்   சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் மக்களுக்கான அமைப்பாளர் எஸ் . சாந்தலிங்கம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க நெறிப்படுத்தல் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தின் ஊடாக, முதற்கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் குறித்த திட்டத்தினூடாக தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு, உரிய தகைமையுடையவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகையினரின் பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை அமைப்பாளர் எஸ் . சாந்தலிங்கத்தினால்  இன்று வழங்கப்பட்டது.

 

 

(சந்திரன் குமணன்)

 

இந்த நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அமைப்பாளர்கள் , கட்சியின் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.