மட்டக்களப்பு மாவட்டத்தில் 5198 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04) காலை வரை 2003 குடும்பங்களைச் சேர்ந்த 5198 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இத்தொகையானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயளர்களுடனான நேரடித் தொடர்புடையவர்கள், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தவர்கள் மற்றும் ஏனைகாரணங்களுக்காகவே இத்தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கூடுதல் தொகையான 376 குடும்பங்களைச் சேர்ந்த 1335 பேரும், மன்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த தொகையான 27 குடும்பங்களைச்சேர்த 59 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர நேற்றயதினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றாளர் என மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து இனங்காணப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் அவருடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுன் சேர்த்து இதுவரை இப்பிரதேசத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 314 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வழைச்சேனை பொலிஸ் பிரிவிலான கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 316 நபர்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 204 குடும்பங்களைச் சேர்ந்த 732 நபர்களும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 421 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 637 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 466 நபர்களும், களுவாஞ்சிக்கடி பிரதேச செயலாளர் பிரிவில் 129 குடும்பங்களைச் சேர்ந்த 130 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 205 நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 155 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 114 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 220 நபர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 94 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.