நாட்டை இரு வாரங்களுக்கு முற்றாக முடக்குங்கள்,தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவிப்பு.

இலங்கையில் அதி தீவிரமாக பரவி வரும் covid19 கட்டுப்படுத்த நாடு பூராகவும் சுமார் இரண்டு வாரங்களுக்காவது முடக்கி தொற்றாளர்களைஅடையாளய் காண அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புடையவர்கள்  அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன்  இன்று(6) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டு மக்கள்  உயிரோடு வாழ்ந்தாள் மட்டுமே ஒவ்வொறு குடும்பமும் சந்தோசமாக உழைத்து வாழ முடியும் அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும்.  இதுவரை நாட்டில் பல பாகங்கள் முடக்கப்பட்ட நிலையில் கூட தொற்று பரவலை  குறைக்க முடியவில்லை  மாறாக அதிகரித்தே காணப்படுகின்றது. அரசாங்கம் நாட்டை முடக்கி மக்களை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கும் விடயத்தில் கவனம் காட்டுவதில் மந்த நிலையை கடைப்பிடிப்பதை காணமுடிகின்றது. இன்று மேன்மை தங்கிய   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் நாட்டை ஒருபோதும் முடக்க இடமளிக்க மாட்டேன் என கூறியது மிகவும் சிந்திக்க வேண்டிய விடயமே!
இன்று நாட்டின் ஒரு சில பாகம் முடக்கம் செய்து பரவலை குறைப்பதே கஸ்ட்டமான நிலையில் முழுமையாக முடக்கத்தை  நீக்கி எப்படி இதை கட்டுப்படுத்துவது என்பது ஒரு கேள்விக்குறியே!
Covid 19 என கிடைத்த நிதி உதவியையும் உலக வங்கியால் வழங்கிய பண உதவியையும் வைத்து நாட்டு மக்களை பாதுகாக்க வழி சமைக்க வேண்டும் மக்களின் வாழ்வாதார நிவாரணங்களை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசாங்கம் மாறாக நிதியை முடக்கி சமூக முடக்கத்தை திறப்பது என்பது கவலைக்குரிய விடயமே!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றாலர்கள் பலத்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் அத்துடன் மரணமும் அதிகரித்தே வருகின்றது. இவைகளை அறிந்த தொற்றாளர்கள் தனிமை படுத்தும் நிலையங்களுக்கு செல்வதற்கு மிகவும் தயங்குகின்றனர்.
அரசாங்கம் இன்றைய நாளைய பொருளாதாரத்தை கவலையாக கொண்டால் எதிர்காலம் முற்றாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
அத்துடன் இப்படி நாளுக்கு நாள் அதிகரிப்பு காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூட வேண்டிய நிலைப்பாடும் ஏற்படும். ஆகவே நாட்டு கல்வி வளர்ச்சியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படும் சூழ்நிலை தோன்றும்.
இவைகளை அரசாங்கம் அதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்  என்றார்.
(எப்.முபாரக்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.