42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில்…

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

பிரதான ரயில் மாரக்கத்திலும், களனிவெளி – புத்தளம் – கரையோர ரயில் மார்க்கங்களிலும் சேவைகள் நடத்தப்படும். பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

அலுவலக ரயில் சேவைகள் நட்ததப்படுகின்றபோதும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகளும், நகர்சேர் கடுகதி ரயில் சேவைகளும் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் பயணிகளை ஏற்றுவதற்கோ இறக்குவதற்கோ அனுமதியில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

2020.11.09 திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ரயில் சேவைகள்

சுகாதார பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி 2020.11.09 திகதி தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில்களை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த ரயில்கள் சுகாதார சேவை பிரிவினால் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் வலய பிரதேசங்களில் நிறுத்தாது சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் எந்தவொரு ரயிலும் நிறுத்தப்படமாட்டாது என்றும் மேலும்அனைத்து ரயில் பயணிகளும் சுகாதார பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார சட்ட விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் தெரிவிக்கின்றோம்.

அந்த வகையில்… சேவை தொடரும் நிலையங்கள்

பிரதான ரயில் பாதை
• தெமட்டகொட உப ரயில் நிலையம்
• களனி உப ரயில் நிலையம் ;
• வனவாசல உப ரயில் நிலையம்
• எடெரமுல்ல உப ரயில் நிலையம்
• ஹொறபே உப ரயில் நிலையம்
• ராகம ரயில் நிலையம்
• வல்பொல உப ரயில் நிலையம்
• பட்டுவத்த உப ரயில் நிலையம்

புத்தளம் ரயில் பாதை
1. பொரலந்த உப ரயில் நிலையம்
2. ஜா – எல ரயில் நிலையம்
3. துடெல்ல உப ரயில் நிலையம்
4. குடஹாகபொல உப ரயில் நிலையம்
5. குருண ரயில் நிலையம்
6. நீர்கொழும்பு ரயில் நிலையம்
7. கட்டுவ உப ரயில் நிலையம்

கரையோர ரயில் பாதை
• பாணந்துறை ரயில் நிலையம்
• பின்வத்த உப ரயில் நிலையம்

களனிவெளி ரயில் பாதை
• பேஸ்லைன் ரயில் நிலையம்
• கொட்டா ரோட் உப ரயில் நிலையம்

வடக்கு ரயில் பாதை
• குருநாகல் ரயில் நிலையம்
• முத்தொட்டுகல உப ரயில் நிலையம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.