தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு;உலர் உணவு பொருடகள் விநியோகம்

கொரோனாதொற்று   காரணமாக தமது வீடுகளிலேயே  தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு
இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌சவினால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதனடிப்படையில் கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 42 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (9) நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தின் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கலந்து கொண்டு கிராம சேவர்களிடம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.அத்தோடு பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
(சர்ஜுன் லாபீர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.