வடக்கில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் கடந்து புலமைப்ப பரிசில் பரீட்சையில் சித்தி!

வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 158 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளார்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்று அதன் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 16.3 வீத மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டிய போதும், இந்த ஆண்டு 17.4 வீதமான மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.
வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 158 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளார்கள்.
அத்துடன், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் முன்னரை விட அதிகரித்தே காணப்படுகின்றது. இதன் மூலம் மாகாணத்தில் கல்வித் தரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.