கிண்ணியா பிரதேச சபை தவிசாளராக மீண்டும் கே.எம்.நிஹார் தெரிவு

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக கே.எம். நிஹார் அவர்கள் மீண்டும் இன்று(17) தெரிவு செய்யப்பட்டார்.
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு 6 மாத காலம் கே.எம் நிஹார் தவிசாளராக இருந்து பின்னர் எச்.எம். சனூஸ் அவர்கள் தவிசாளராக நியமிக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் திகதி இராஜினமா செய்ததை அடுத்தே மீண்டும் கே.எம் நிஹார் அவர்கள் தவிசாளராக இன்று தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதனை அடுத்து புதிய தவிசாளர் தெரிவு இன்று தற்காலிக தவிசாளர் எம்.பாஸித் மற்றும் உள்ளுராட்சி சபை ஆணையாளர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
66 P உபபிரிவிற்கு அமைய தவிசாளர் உபதவிசாளரை தெரிவு செய்வதற்கான அதிகாரித் திற்கு அமைய உள்ளுராட்சி சபை ஆணையாளரினால் இன்றைய தினம் தவிசாளர்  தெரிவு இடம்பெற்றது.
இத் தெரிவின்போது கே.எம்.நிஹார் அவர்களின் பெயரினை றஸ்மி அவர்கள் முன்மொழிய முன்னாள் தவிசாளர் எச்.எம். சைபுதீன் (சனூஸ்) அவர்கள் வழிமொழிந்தார்.
அதே கட்சியைச் சேர்ந்த நஸீர் அவர்களை தவிசாளராக அவரை அவரே  முன்மொழிந்தார் இருந்தாலும் அந்த முன்மொழிவு உள்ளுராட்சி சபை ஆனையாளரினால் உள்ளுராட்சி சபை சட்டத்திற்கு முரணானது எனக்கூறி நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே கே. எம் நிஹார் அவர்களை எவ்வித ஆட்சேபனையும் இன்றி சபையோரால் தவிசாளராக உள்ளுராட்சி ஆனையாளர் தெரிவு செய்தார்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.