முல்லைத்தீவில் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு !

முல்லைத்தீவு மாவட்டத்தின்  எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவிற்கூருவதற்கு முல்லைத்தீவு தலைமை பொலீசார் வழக்கு தொடர்ந்து மாவட்ட நீதவான் நீதிமன்றறில் தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் மாவீரனின் சகோதரனும் ஆகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் மாற்றும் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, மகாணசபை உறுப்பினர்கள்  உள்ளிட்ட 13 பெயரின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிவிசேட வர்த்தமானியின் ( இலக்கம் 1721/02 ) கீழ் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் உறுப்பினர்களின் புகைப்படங்கள் பிரசுரித்தல், அமைப்புக்குரிய கீதத்தை இசைத்தல், அதே அமைப்புக்குரிய இலட்சனை, பதாதைகள், கொடிகள், சிரமதானம், மற்றும் அலங்காரம், அமைப்புக்குரிய தேசிய மலர் போன்றவற்றை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல்லுக்கும் தடை விதித்தும்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்குட்பட்ட பிரதேசங்களின்  20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் வைக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வினை நடத்த. தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்.

பெயர் குறிப்பிட்ட நபர்கள் மாவீரர் நாளினை செய்யவோ அல்லது நண்பர்கள் செய்வதற்கு ஊக்கிவிக்கவோ ஒத்துளைப்பு வழங்கவோ நேரடியாகவோ மறைமுகமாகவே எந்த செயல்களையும் செய்யாதிருக்குமாறு நீதிமன்ற கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்வரும் நபர்களுக்கு முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய அதிகரியினால் பெறப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

01) க.வி.விக்னேஸ்வரன்
(பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பானம்)

02) செல்வராசா கஜேந்திரன்
(பாராளுமன்ற உறுப்பினர்  யாழ்ப்பானம்)

(03) எம்.கே. சிவாஜிலிங்கம்
(முன்னாள் வடமாகாண சபை சபை
உறுப்பினர், யாழ்ப்பானம்)

04) கஜேந்திரகுமார் பொண்ணம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பானம்.)

05)துரைராசா ரவிகரன்
(முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர், முல்லைத்தீவு )

06) அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன்
(மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு )

07) முத்துராசா சிவநேசராசா அல்லது கரன் (கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவு )

08) சிவப்பிரகாசம் சிவமோகன்  (புதுக்குடியிருப்பு )

09) தம்பிராசா யோகேஸ்வரன் அல்லது முல்லை ஈசன்  (புதுக்குடியிருப்பு)

10) இசித்தோர் அன்டன் ஜீவராசா (கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவு)

11) மரியசுரேஸ் ஈஸ்வரி தலைவர் (காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்)

12) எஸ்.சந்திரன்
(பாரதிவீதி தேவிபுரம் புதுக்குடியிருப்பு)

13) பேதுருப்பிள்ளை ஜெராட்
(அளம்பில் வடக்கு, அளம்பில்)

(இவர்கள் மற்றும் இவர்கள் சார்பான ஏனையவர்கள்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.