சோளம் அறுவடை நிகழ்வு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகனேசபுரம் கிராமத்தில் சோளம் அறுவடை நிகழ்வு இன்று(26) நடைபெற்றது.

படைப் புளுவில் இருந்து சோளத்தினை பாதுகாத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக அறிமுகம் செய்யப்பட்ட முன்மாதிரி துண்டச் பயிர் செய்கை முறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சோளமே இவ்வாறு அறுவடை செய்யப்பட்டது.

சோளம் பயிர்களுக்கிடையே ஊடு பயிர்களாக நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டதனால் புழுக்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் படைப் புழுவின் தாக்கத்தினால் தங்களது சோள உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் முன்மாதிரி துண்டப் பயிர் செய்கை மூலம் புழுக்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வாகரை விவசாயத் தினைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வாகரை வடக்கு உதவி விவசாயப் பணிப்பாளர் சி.சித்திரவேல், வாகரை பிரதேச போதனாசிரியர்கள் கலந்து கொண்டு அறுவடையினை மேற்கொண்டனர்.

(ந.குகதர்சன் )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.