அம்பாறை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா…

கார்த்திகை தீபத் திருவிழாவை  இந்துக்கள் நாடளாவிய ரீதியில்  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(29 ) இரவு  பெண்கள் ,ஆண்கள் ,சிறுவர்கள் என  வீடுகள் ,தெருக்கள்மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால்  தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில்  ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள  முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம்   நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில்   சொர்க்கப்பனை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக இடம்பெற தயார் நிலையில் உள்ளது.

 

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் -படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
(பாறுக் ஷிஹான்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.