புரேவி புயல்: நீர்கொழும்பு – பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோரத்தில் ……..

நேற்று இரவு நாட்டிற்குள் பிரவேசித்த புரெவி சூறாவளி தற்பொழுது மன்னார் வலைகுடாவிற்கு அருகாமையில் நிலைக்கொண்டுள்ளது.

அத்தோடு அது இன்று நண்பகல் அளவில் நாட்டை விட்டு  நகரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில மணித்தியாலங்களில் சூறாவளி காற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பில் இருந்து பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோரத்தில் ஒரு மீற்றர் வரையிலான அலைகள் எழுந்து, கடல் நீர் நிலத்தில் உட்புகக் கூடிய சாத்தியம் உள்ளதென திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காலநிலையின் காரணமாக, நாட்டின் வடக்கு, வடமேல், மேல், வடகிழக்கு கரையோரங்களுக்கு அப்பால் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும். சில சமயங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்படலாம். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்பிலும் கொந்;தளிப்பான நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பாக தெரிவிக்கையில், சூறாவளியின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டதாக மாவட்ட இடர் குழுக்கள் மூலம் பதிவாகவில்லை என தெரிவித்தார்.

மரங்கள் முறிந்து விழுந்தமை, தாழ் நிலங்கள் வெள்ளத்திற்கு உள்ளானமை போன்ற பல சம்பவங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் மன்னார் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளுக்கு நிவாரண குழுக்கள் தற்பொழுது அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டிருந்த புரெவி சூறாவளி நேற்று இரவு 10.30 க்கும் 11.00 மணிக்கும் இடையில் இலங்கையின் கடல் பகுதியிலும்இ உச்சவெளிக்கும் இடையில் தரையை தட்டி நாட்டிற்குள் பிரவேசித்துள்ளது.

இதன்போது காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமிட்டர் வரையில் இருந்ததுடன், அது படிப்படியாக மணித்தியாலயத்திற்கு 90 கிலோமிட்டர் வரையில் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும். சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கு மேற்ப்பட்ட கடும் மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.