(வீடியோ )எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கலாரஞ்சினி

 

 

எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவில் யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சியில் இடம்பெற்ற நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்திலே் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கெண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவிவ் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டே உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதனை அடுத்த ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் கையளிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு இதுவரை எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை. அவர்களையும் இதுவரை விடுதலை செய்யவில்லை. இதற்காக நாங்கள் தொடர்ச்சியாக வீதியில் போராடி வருகின்றோம். தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை தேடி அவர்களின் வருகைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட 70ற்கு மெற்பட்ட பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்கள் இப்புாது இருக்கின்ற நாங்களும் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றோம். இலங்கை அரசு எங்களுக்கு ஓர் நீதியை தரும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை.
நாங்கள் எங்களுடைய உரிமை பற்றியும், காணாமல் போனவர்களுடைய நிலைமை பற்றியும் அறிவதற்காக நாங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய தமிழ் பாராளுமன்ற றுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இதுபற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர்,  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டே எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர சர்வதேசத்தில் வாழும் எங்கள் ஒறவுகள் ஒன்றிணைந்து நீதியை பெற்றுத்தர முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பேச வேண்டிய இடங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.