உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு கொரோனா பேராபத்து வலயமாக அறிவிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்…

கொரோனா வைரஸ் அதி ஆபத்து வலயமாக யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தீவிர கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தப் பகுதியில் அமுலாகின்றன.

நேற்று வரை ஆபத்துக் குறைந்த பகுதிக்கான பச்சை வர்ணத்தில் குறிக்கப்பட்டிருந்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவு கொரோனாத் தொற்று நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலேயே அதி ஆபத்து சிவப்பு வலயமாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இத்தப் பகுதிளுக்கு நுழைவது, அங்கிருந்து வெளியேறிவது உள்ளிட்ட நடவடிக்கைள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனாக் கட்டுப்பாட்டு செயற்றிட்டங்களும் இந்தப் பகுதியில் தீவிரமாக அமுல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு நேற்றிரவிலிருந்து மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக யாழ். மாவட்ட அரச அதிபரால் இந்த முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்