மட்டக்களப்பில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில், பசுமை மீட்புப் புரட்சி எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்
வெள்ளிக்கிழமை  ( 01.01.2021 ஆந் திகதி)  “பசுமை மீட்பு பாசறை” முற்போக்குத் தமிழர்களின் ஏற்பாட்டில்  வவுணதீவில் இடம்பெற்ற ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மண்முனை மேற்கு பிரதேச  செயலாளர் எஸ்.சுதாகர்,
அமைச்சரின் பிரத்தியேக  செயலாளர்,இணைப்புச் செயலாளர்கள், , முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள். ஆகியோர் கலந்துகொண்டருந்தனர்.
வவுணதீவு ஆயித்தியமலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பசுமை மீட்புப் புரட்சி திட்டத்தில் ஒரு இலட்சம் மபயன்தரும் மரக் கன்றுகளை கட்டம் கட்டமாக பொருத்தமான இடங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.